'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' – மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

Spread the love

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகரை சந்தித்து தங்கள் அணி அறிவிக்கும் கொறடாவையே அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் சி.வி.சண்முகம் அணி
தலைமைச் செயலகத்தில் சி.வி.சண்முகம் அணி

திமுக – அதிமுக கூட்டணி திரைமறைவு பேச்சுகள் மற்றும் தவெகவுக்கான ஆதரவு நிலைப்பாடு போன்றவற்றால் அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் எனவும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் எனவும் பிளவு பட்டனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்புமே சட்டமன்றத்தில் தங்கள் தரப்பையே அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்து வருகின்றனர். நேற்று எடப்பாடி பழனசாமி அணி தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இன்று சி.வி.சண்முகம் அணி தரப்பில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் போன்றோர் சபாநாயகரை சந்தித்து பேசி, சி.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். சபாநாயகரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சி.வி.சண்முகம் அணியினர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றனர்.

சபாநாயகர்
சபாநாயகர்

இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. செய்தியாளர்களை அழைத்துப் பேசியிருந்தார். அவர் கூறுகையில், ‘இருதரப்பும் தங்கள் தரப்பின் கோரிக்கைகளை கடிதங்களாக கொடுத்திருக்கின்றனர். இரு தரப்பின் மனுக்களையும் பரிசீலித்து சட்டப்படி ஆலோசித்து முடிவை சட்டமன்றத்திலேயே அறிவிப்போம். கொறடா யார் என்பது குறித்தும் விரைவில் முடிவெடுப்போம்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *