72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்.. விடை பெற்றார் பாரதிராஜா..! இறுதி சடங்கு செய்த மகள்..! | Bharathiraja daughter performed the final rites

Spread the love

திரைத்துறையிலிருந்து இயக்குநர்கள் வெற்றி மாறன், பார்த்திபன், ராம், அமீர் ஆர்.கே.செல்வமணி, பொன்ராம், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மதியம் நான்கு மணி அளவில் பாரதிராஜாவின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டது.

பாரதிராஜாவின் உடலில் கொடி போர்த்திய சீமான்

பாரதிராஜாவின் உடலில் கொடி போர்த்திய சீமான்

அதையடுத்து பாரதிராஜவின் உடல் அடக்கம் செய்யும் கொண்டு செல்வதற்காக தயார் செய்யும் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழ விடுதலைக் கொடியை பாரதிராஜாவின் உடலில் போர்த்தினார் .

தொடர்ந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு பாரதிராஜாவின் மகள் ஜனனி அவருக்கு இறுதி சடங்குகள் செய்தார்.

இறுதிச் சடங்கு செய்த பாரதிராஜாவின் மகள் ஜனனி

இறுதிச் சடங்கு செய்த பாரதிராஜாவின் மகள் ஜனனி

தொடர்ந்து காவல்துறையினர் பரேட் நடந்தது. அதில் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டனர். மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *