8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தமிழக அரசுக்கு நன்றி சொன்ன தேவகோட்டை மாணவர்கள்! | Breakfast Scheme: Breakfast Scheme Expanded to Class 8 at Devakottai Chairman Manicka Vasagam Middle School

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் இன்று முதல் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் காலை உணவுத் திட்டம் மூலமாக சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breakfast Scheme

காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்காக மட்டும் தமிழக அரசு சார்பாக ரூ.217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய் கிழமையன்று கிச்சடி, புதன்கிழமையன்று பொங்கல், வியாழக்கிழமையன்று உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை உணவு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியை சிவரஞ்சனி, நகராட்சி பணியாளர் தேன்மொழி, உணவுப் பணியாளர் தமிழ்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதால், மகிழ்ச்சியடைந்த மாணவ, மாணவியர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சத்தாண உணவு மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *