திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து பேசிய கனிமொழி, “வேண்டுமென்றே கால்புணர்ச்சியில் செய்திருக்கக்கூடிய அத்துமீறல்தான் இந்தக் கைது.
அப்படி என்ன அவசரம்? இடைத்தேர்தலில் பதியப்பட்ட வழக்கிற்காக காலையில் 5 மணிக்குச் சென்று அவரையும், அவரது கணவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக கார்த்திகாவிற்கு உடை மாற்றக்கூட அனுமதி கொடுக்காமல் கைது செய்ய வேண்டிய சூழல் என்ன இருக்கிறது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.