International
oi-Hema Vandhana
நியூயார்க்: மகள் இறந்துவிட்டதாக நினைத்து சவப்பெட்டியில் வைத்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார் அப்பா.. சொந்தக்காரர்கள் எல்லோரும் வீட்டில் கூடி அழுதுகொண்டிருந்த நேரத்தில், சவப்பெட்டிக்குள் இருந்த 15 வயது சிறுமி திடீரென, கண்விழித்தார்.. இதைப் பார்த்த அம்மா, அப்பா மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.. அப்படி என்ன நடந்தது?
குவாத்தமாலா நாட்டின் எல் ஜோகோட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.. யூலெய்டி இக்ஸ்கோடோயாக் என்ற 15 வயது சிறுமிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது..

15 வயது சிறுமி
சம்பவத்தன்று அதிகாலையில் யூலெய்டிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டதுடன், நெஞ்சு பாரமாக இருப்பதுபோலவும் உணர்ந்துள்ளார்.. இதனால் பதறிப்போன அவரது அப்பா ஆபிரகாம் இக்ஸ்கோடோயாக் டோஜின், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்..
ஆனால், வழியிலேயே சிறுமி மயங்கிவிட்டார்.. சான் பெட்ரோ ஜோகோபிலாஸ் பகுதி அருகே சென்றபோது, மகள் மூச்சுவிடவில்லை என்றும், கையில் நாடித்துடிப்பை உணர முடியவில்லை என்றும் அப்பா தெரிவித்துள்ளார்.. இதனால் மகள் இறந்துவிட்டதாகவும் நினைத்துள்ளார்.. மகளை இழந்துவிட்டதாகக் கருதிய அவர், இறுதிச்சடங்குக்காகச் சவப்பெட்டியை வாங்கியுள்ளார்.. பிறகு மகளை வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார்..
சவப்பெட்டி வாங்கிய அப்பா
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமிக்கு பேச்சு மூச்சு இல்லை என்றதும், அவள் இறந்துவிட்டதாக முடிவு செய்தாரே தவிர, மகளை அதற்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.. அந்த சிறுமி இறந்துவிட்டதாக எந்த டாக்டரும் பரிசோதித்து கன்பார்ம் செய்யவுமில்லை.. இதனால் சிறுமிக்கு இறப்புச் சான்றிதழும் வழங்கப்படவில்லை..
மகள் இறந்துவிட்டதாக நினைத்த ஆபிரகாம், சவப்பெட்டியை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.. அதற்குள் அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என நிறைய பேர் கூடியுள்ளனர்..
அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.. மகளை இழந்த துக்கத்தில் அப்பா வீட்டின் ஹாலில் இருந்துள்ளார்.. மற்ற உறவினர்கள் எல்லாரும் சவப்பெட்டியின் அருகே நின்று அழுதுகொண்டிருந்தனர்.. யூலெய்டியின் அம்மா லெஸ்வியாவும், மகளின் சவப்பெட்டியின் அருகே நின்று அழுதுகொண்டிருந்தார்..
திடீரென கண்விழித்த மகள்
அப்போது சவப்பெட்டிக்குள் ஏதோ அசைவதைக் கவனித்துள்ளார்.. மீண்டும் உற்று கவனித்தபோது, சவப்பெட்டி அசைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. உடனே சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது, சிறுமி கண்விழித்துள்ளார்.. இதைப் பார்த்த உறவினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்..
உடனே சிறுமியை சவப்பெட்டியிலிருந்து வெளியே தூக்கி உதவியதுடன், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.. துக்கத்தில் அழுதுகொண்டிருந்தவர்கள், சிறுமி உயிருடன் இருப்பதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் கூச்சலிட்டனர்.. இந்த சம்பவம் அப்படியே வீடியோவாகவும் வெளிவந்து, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சுயநினைவு திரும்பிய பிறகு சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.. நெஞ்சில் வலி அதிகமாக இருந்தது.. நெஞ்சு பாரமாக அதிகமாகி கொண்டேபோனால், மயங்கிவிட்டேன், அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியவில்லை.. இப்போது உயிருடன் இருப்பதற்கு, கடவுளுக்கும் பெற்றோருக்கும் நன்றி.. ஆனால், என்னுடைய இன்னும் நடுங்குகிறது.. கொஞ்சம் கொஞ்சமாகத் தெம்பு திரும்பி வருகிறது” என்கிறார்.
மொத்தம் 8 மணி நேரம்
சிறுமி யூலெய்டியின் அப்பா ஆபிரகாம், கிறிஸ்தவ மதபோதகர் ஆவார்.. மகள் உயிருடன் திரும்பியதை அவர் கடவுளின் அருளாகவே பார்க்கிறாராம்.
சிறுமி மயங்கியதிலிருந்து சவப்பெட்டிக்குள் அசைந்து கண்விழித்தது வரை கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகியிருக்கிறது.. மயங்கி விழுந்து 8 மணி நேரம் கழித்துதான் அவருக்கு நினைவுதிரும்பியிருக்கிறது.. ஆனாலும், இந்த 8 மணி நேரமும், சிறுமியின் உடல்நிலை அப்போது எப்படி இருந்தது என்பதற்கு மருத்துவ ரீதியாக உறுதியான விளக்கம் வெளியாகவில்லை..!!!