ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஷாக்! – Kumudam

Spread the love

ஒரு காலக்கட்டத்தில் தங்கம் என்றால் பிரியப்பட்டு வாங்கி கொண்டிருந்த மக்களிடம் தற்போது தொடர்ந்த அதிர்ச்சியளித்தே வருகிறது. குறிப்பாக ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்ந்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் ( 19.08.2026) காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மாலை திடீரென உயர்ந்தது.  அதன்படி கிராமுக்கு ரூ 195 உயர்ந்து ஒரு கிராம்  ரூ 14,400 க்கும்,  சவரனுக்கு ரூ 1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,15,200 க்கும்,  விற்பனையானது. அதனைத்தொடர்ந்து நேற்று (20.08.2026) கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 14,600 க்கும, சவரனுக்கு 1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,16,800 க்கும் விற்பனையானது.

இதனை தொடர்ந்து இன்று காலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலை ஏறிய தங்கம் விலை தற்போது மாலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் தற்போது இது நகை வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் படி கிராமுக்கு 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ14,850 க்கும் , சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,18,800 க்கும், விற்பனை செய்யப்படுகிறது.இன்று ஒரே நாளில்  ரூ 2000 உயர்ந்துள்ளதால் இல்லதரசிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும்,  பார் வெள்ளி 2,70,000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *