Sports
oi-Yogeshwaran Moorthi
வாஷிங்டன்: ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 9 நிமிடங்களில் மொத்த ஆட்டத்தையும் மாற்றி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஆல்வரஸ் அடித்த கோல் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. இதனால் அர்ஜென்டினா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஸ்விட்சர்லாந்து அணி களமிறங்கியது. இந்தப் போட்டியின் 10வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணியின் ஆலிஸ்டர் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன்பின் விழித்து கொண்ட ஸ்விட்சர்லாந்து அணி டிஃபென்ஸில் அசத்தியது.

தங்கள் கோல் போஸ்ட் பக்கமே அர்ஜென்டினா வீரர்களை வரவிடவில்லை. மெஸ்ஸியை சுற்றில் 3 வீரர்கள் எப்போதும் நின்று கொண்டே இருந்தனர். இதனால் முதல் பாதி 1-0 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. இதன்பின் 2ஆம் பாதியில் அர்ஜென்டினா அணி வீரர்களால் பந்தை தங்கள் கால்களிலேயே தக்க வைத்து கொள்ள முடியவில்லை.
ஸ்விட்சர்லாந்து அணி வீரர்கள் எளிதாக அட்டாக்கை தொடங்க, அர்ஜென்டினா அணி சிக்கலில் இருப்பது தெரிந்தது. அதற்கேற்ப 2 முறை கோல் அடிக்க ஸ்விட்சர்லாந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டது. அப்போதெல்லாம் கோல் கீப்பர் மற்றும் டிஃபென்ஸ் ஆடும் வீரர்களே அர்ஜென்டினா அணியை காப்பாற்றினர். அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்திருந்தால், சிக்கல் உச்சம் அடைந்திருக்கும்.
அதனை மீறி 67வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் டான் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதன்பின் 2ஆம் பாதியில் இரு அணிகளாலும் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தில் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து அணி 2வது கோலை அடித்த பின் பிடியை தளர்த்தியது.
அர்ஜென்டினாவும் சிறிது நேரம் தங்களுக்குள்ளே பாஸ் செய்ய தொடங்கினர். அதன் பலனாக 112வது நிமிடத்தில் ஆல்வரஸ் அற்புதமான ஒரு கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் லொட்டாரோ மார்ட்டினஸும் ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.