நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு பழங்குடியின பகுதியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்வதற்காகவும், காணிப்பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் செய்வதற்காகவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேற்றுமுன் தினம் மாலை பாபநாசம் முண்டத்துறை வனச்சரகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் வந்து தங்கினார்.

அவருடன் வந்த பழங்குடியின நலத்துறை இயக்குநர், அத்துறையின் உயரதிகாரிகள், உதவியாளர்கள், கார் டிரைவர்கள் உட்பட அன்னைவரும் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று காலை பழங்குடியின நலத்துறையின் இயக்குநரின் கார் டிரைவரான திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் முகாம் அலுவலக குடியிருப்பு அருகேயுள்ள இயற்கை அழகு நிறைந்த மலைப்பகுதியில் மரங்களின் இடையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டார்.