பின்னர், தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்று விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் தனது நண்பரான ஸ்ரீநாத்தை களமிறக்க முடிவு செய்தாராம் விஜய். முதலில் தயங்கிய ஸ்ரீநாத், பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளும், தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், 62,805 வாக்குகள் பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நிலையில், சீட்டும் வழங்கப்படவில்லை. இதனால், “த.வெ.க-வில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் பதவி வழங்கப்படுகிறது” என விமர்சித்தார் அஜிதா.

பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து த.வெ.கவிற்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால், அவரது பிரசாரம் எடுபடவில்லை. ஸ்ரீநாத்தை வெறும் காமெடி நடிகராகவே சித்தரித்து தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால், தமிழகத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று சிட்டிங் அமைச்சர் கீதா ஜீவனையே வீழ்த்தியுள்ளார் ஸ்ரீநாத்.