Actress Juhi Chawla’s husband sells 22% stake in Kolkata Knight Riders to an American company-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் 22% பங்குகளை அமெரிக்க கம்பெனிக்கு விற்ற நடிகை ஜுஹி சாவ்லா கணவர்

Spread the love

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு 55 சதவீத பங்கு இருக்கிறது. அவரது தோழியான நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு 45 சதவீத பங்கு இருக்கிறது. இந்த பங்கு ஜூஹி சாவ்லாவின் கணவர் ஜெய் மேத்தா பெயரில் இருக்கிறது. ஜெய் மேத்தா தன்னிடம் இருக்கும் பங்கில் பாதியை அதாவது 22.5 சதவீத பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளார். இது முழுமையாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெற்ற ஒப்பந்தம் என்றும், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்த விற்பனை முழுமையடையும் என்று கூறப்படுகிறது.

இந்த விற்பனை ஒப்பந்த மதிப்பீட்டின்படி, கேகேஆர் (KKR) அணியின் மதிப்பு சுமார் 1.78 பில்லியன் டாலர்கள், அதாவது ஏறத்தாழ 16,634 கோடி ரூபாயாக உள்ளது. அதில் 22.5 சதவீத பங்கு ரூ.3,736 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, ​​நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், ஜூஹி சாவ்லா மற்றும் ஜே மேத்தா ஆகியோர் சேர்ந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையைக் 75.09 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினர்.

ஜெய் மேத்தா, ஜூஹி சாவ்லா

ஜெய் மேத்தா, ஜூஹி சாவ்லா

தற்போதுள்ள அதன் மதிப்பு, வாங்கப்பட்ட தொகையை விட 24 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. 22.5 சதவீத பங்குகளை வாங்கும் அமெரிக்காவின் ஏரெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் விளையாட்டு அணிகளில் பங்குகள் உள்ளன.

இந்த ஆண்டு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கைமாறும் மூன்றாவது ஐபிஎல் அணியாக கேகேஆர் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு (சுமார் 1.78 பில்லியன் டாலர்) விற்றது. கடந்த மே மாதத்தில், லட்சுமி என். மிட்டல் மற்றும் ஆதித்யா மிட்டல் ஆகியோர், ஆதார் பூனாவாலாவுடன் இணைந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.65 பில்லியன் டாலருக்கு (ரூ. 15,660 கோடி) வாங்கினர் என்பதும் குறிப்பிடத்தாக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *