அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கத்தார் (Qatar) நாடு பரிசாக வழங்கிய அதிநவீன மற்றும் ஆடம்பரமான புதிய “ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தை வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுத் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். “பறக்கும் வெள்ளை மாளிகை (Flying White House)” என்று ட்ரம்ப் வர்ணித்துள்ள இந்த விமானம், உலகின் மிக ஆடம்பரமான விமானமாக கருதப்படுகிறது.
புதிய விமானத்தின் சிறப்பம்சங்கள்
சுமார் 40 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களின் பயன்பாட்டில் இருந்த பழைய வெளிர் நீல நிற விமானத்திற்குப் பதிலாக, அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களான சிவப்பு, வெள்ளை மற்றும் அடர் நீல நிறங்களுடன் இந்த புதிய போயிங் (Boeing) 747-8i சொகுசு விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விமானத்தை விட இரண்டு மடங்கு பெரியது மற்றும் மிக வேகமாகப் பறக்க கூடியதாகும்.
இதன் உட்புறத்தில் உயர்தர மரவேலைப்பாடுகள், சொகுசான லெதர் இருக்கைகள் என யாரும் பார்த்திராத அளவிலான பிரமாண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.