39 வயசாகியும் பொல்லார்ட் இன்னும் மாறலை.. மும்பை அணிக்கு மீண்டும் மரண அடி.. சோகத்தில் அம்பானி! | Kieron Pollard: Kieron Pollard Blasts Magnificent Century as MI New York Suffers 30-Run Defeat against Washington Freedom in MLC 2026

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

டால்லஸ்: எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை நியூயார்க் அணி த்ல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் சீனியர் வீரரான பொல்லார்ட் ஒற்றை ஆளாக நின்று 56 பந்துகளில் சதத்தை எட்டினார். இது மட்டுமே மும்பை அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில், வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை நியூயார்க் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வாஷிங்டன் ஃபிரீடம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய மிட்சல் ஓவன் 68 பந்துகளில் 13 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 155 ரன்களை விளாசி தள்ளினார்.

Kieron Pollard

இதன்பின் பிரம்மாண்ட இலக்கை விரட்டிய மும்பை நியூயார்க் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. மோனன்க் படேல் 5 ரன்களிலும், டி காக் 1 ரன்னிலும், பூரன் 11 ரன்களிலும், தில்லன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மொத்த பொறுப்பும் சீனியர் வீரரான பொல்லார்ட் தலை மீது விழுந்தது.

39 வயதானாலும் இந்த பிரஷரை கொஞ்சம் கூட பொல்லார்ட் உணரவில்லை. தொடக்கம் முதலே அதிரடியில் விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய பொல்லார்ட் கடைசி பந்து வரை களத்தில் இருந்து சதத்தை எட்டினார். 56 பந்துகளில் 4 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 100 ரன்களை எடுத்தார். ஆனால் எதிர்முனையில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

இதனால் மும்பை நியூயார்க் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் 100 ரன்களை விளாசியதன் மூலமாக பொல்லார்ட் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய கிறிஸ் கெய்லின் சாதனையை பொல்லார்ட் முறியடித்துள்ளார்.

சர்வதேச போட்டிகள் மற்றும் லீக் ஆகிய இரண்டிலும் சேர்த்து பொல்லார்ட் 14,567 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக 653 இன்னிங்ஸில் விளையாடியுள்ள பொல்லார்ட் 2 சதங்கள், 67 அரைசதங்கள், 909 பவுடரி, 986 சிக்ஸ் மற்றும் 333 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் டி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக பொல்லார்ட் உருவெடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *