பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளைச் சமூக வலைதளவாசிகள் தொடர்ந்து நுணுக்கமாக ஆராய்ந்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சில நேரங்களில் ரன்பீர் கபூருக்கு ஆலியா பட் சரியான பொருத்தமில்லை, ரன்பீர் ஆணாதிக்கம் கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், தனது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூருடனான தனது திருமண வாழ்க்கையை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். “டைம்’ இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ பெண்கள் தங்கள் மனதையும், விருப்பத்தையும் அறிந்து செயல்பட வேண்டும் என்று எப்போதும் குரல் கொடுப்பவள் நான். அப்படிப்பட்ட என்னை, ஏதோ ஒரு கற்பனையான சூழலில் சிக்கித் தவிப்பவளைப் போலச் சுருக்கிப் பார்ப்பது மிகவும் அவமரியாதையானது.