‘All is well , Confidenta இருங்க.!’- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வழங்கிய முதல்வர் | Chief Minister distributes cakes on the occasion of Children’s Day

Spread the love

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் சென்னை, கொளத்துர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று (நவ.13) துவங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

 கேக் வழங்கிய முதல்வர்

கேக் வழங்கிய முதல்வர்

இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கேக் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகளை உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்கப்படுகிறது.

மேலும் கேக்குடன் கொடுக்கப்படும் வாழ்த்து அட்டையில் “All is well , Confidenta இருங்க” பிரியமுடன் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *