America: “ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% சுங்கவரி” – அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்! | Trump has stated that a fee must be paid if security is to be provided in the Strait of Hormuz.

Spread the love

பொதுவாக, கப்பல் நிறுவனங்கள் தங்களது சரக்குகளின் மதிப்பில் 2% முதல் 3% வரை மட்டுமே கட்டணமாகச் செலுத்துவது வழக்கம். ஆனால், ட்ரம்ப் கோரும் 20% கட்டணம் என்பது தற்போதைய நிலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்பதால், எந்தவொரு நிறுவனத்தாலும் இதைச் செலுத்த முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், அமெரிக்கா பாதுகாப்பு வழங்கினாலும் கூட, அங்குள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க மறுக்கக்கூடும் என்பதால், இறுதி முடிவை காப்பீட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்

அமெரிக்கா – ட்ரம்ப் – ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி என்பது சர்வதேச கடல் எல்லையாகும். சர்வதேச சட்டங்களின்படி, இங்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் கட்டணமின்றி சுதந்திரமாகச் செல்ல உரிமை உண்டு. இதற்கு முன்பு ஈரான் இதேபோன்ற சேவை கட்டணங்களை விதிக்க முயன்றபோது, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சரக்கு மதிப்பின் அடிப்படையில் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் முறை வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளது. 1400-களின் தொடக்கம் முதல் 1800-களின் நடுப்பகுதி வரை டென்மார்க் நாடு தனது ‘ஓரேசுண்ட்’ கடல் வழியைக் கடக்கும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பின் அடிப்படையில் கட்டணம் வசூலித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *