ஸ்பேஸ் ஸோன் இந்தியா மற்றும் புதிய சாதனைகள்!
இந்தியா உலக விண்வெளிப் போட்டியில் வெறும் பங்கேற்பாளராக இருக்கக்கூடாது, ஒரு தலைவராக மாற வேண்டும் என்ற கனவுடன் ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த லட்சியப் பயணத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவளித்தவர்களில் அவரது தந்தையும் ஒருவர். குறைந்த முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் அதிகம் பேசப்படும் ஒரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
RHUMI-H என்ற திட்டத்தின் மூலம், மொபைல் தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை உருவாக்கி பெரிய கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து வந்த RHUMI-1 திட்டம், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.
நிராகரிப்பு முதல் அங்கீகாரம் வரை!
இத்தனை வெற்றிகளுக்கு மத்தியிலும், அமெரிக்க விசா நிராகரிப்பு ஒரு தடையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், டாக்டர் ஆனந்த் அதைக் கண்டு துவளவில்லை. அப்போது அவர் சொன்ன, “எல்லைகள் மனிதர்களுக்குத்தான். கண்டுபிடிப்புகளுக்கு எல்லைகள் இல்லை” என்ற வார்த்தைகள், அவரது தத்துவமாகவே மாறியது.
சில வருடங்கள் கழித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஒரு மாத காலத் தீவிரப் பயிற்சியில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள், விண்வெளிப் படைத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் விண்வெளித் துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்த அனுபவம், இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்களை வலுப்படுத்தப் பெரிதும் உதவும் என்று டாக்டர் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது, ஸ்பேஸ் ஸோன் இந்தியா தனது அடுத்த பெரிய மைல்கல்லான ‘RHUMI Twin Mission’ திட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
இந்தியாவின் தனியார் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, சென்னையிலிருந்து ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவும் லட்சியத் திட்டம் இது. நிராகரிப்புகள் முடிவல்ல, அவை புதிய தொடக்கங்களுக்கான படிக்கட்டுகள் என்பதை டாக்டர் ஆனந்தின் வாழ்க்கை அழுத்தமாகச் சொல்கிறது.!