Ananda Vikatan – 25 November 2026 – ஜோக்ஸ் – கஜானா காலி!

Spread the love

ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப jokes@vikatan.com

“மந்திரியாரே, நமது கஜானா காலியாகிவிட்டதே, என்ன செய்யலாம்?”

“மன்னா, உடனடியாக நமது ராஜ்ஜியத்துக்கு ஒரு ‘யூடியூப் சேனல்’ ஆரம்பித்து அரண்மனை வதந்திகளை வீடியோவாகப் பதிவிடுவோம்!”

– ஆதவன்

“இடைத்தேர்தலில் நாங்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்று கேலி செய்பவர்களுக்கு நாங்கள் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம். வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டாவது சுற்றில் நாங்கள் முன்னணி வகித்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள்…”

– எல்.அருள் மொழி

“அது அரசியல் புரோக்கரோட ஆபீஸுன்னு எப்படிச் சொல்ற?”

“ ‘எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் வாங்க, விற்க அணுகவும்”னு வாசல்ல போர்டு மாட்டியிருக்கே!”

– சு.அருண் பிரகாஷ்

“மன்னர் ஏன் கோபமா இருக்காரு?”

“ ‘மின்னல் வேகத்தில் புறமுதுகிட்டு ஓடுவது எப்படி?’ன்னு அவரை ஆன்லைன் கிளாஸ் எடுக்கச் சொன்னாங்களாம்…!”

– இரா.அ.தென்றல் நிலவன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *