Anbe Diana: “டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" – 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

Spread the love

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து ‘அன்பே டயானா’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

அன்பே டயானா படக்குழு
அன்பே டயானா படக்குழு

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ‘அன்பே டயானா’ படத்தின் மூலம் ‘ரீ என்ட்ரி’ கொடுத்திருக்கிறார் நடிகை ரோஜா. இப்படத்தில் அவர் ‘வக்கலங்கா சரளா’ என்ற அன்பான, அதே சமயம் பவர்புல்லான அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகை ரோஜா, “ஒவ்வொரு காட்சியிலும் என் சொந்தக் குடும்பத்தில் என் பையன், பொண்ணு, கணவர் செல்வாவோடு நான் எப்படி இருப்பேனோ, அதுவே எனக்கு நினைவுக்கு வந்தது.

குடும்பப் பாசம், டாமினேஷன், கிளைமாக்ஸில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் என அனைத்தையும் இயக்குநர் பாரி அழகன் மிக அழகாக எடுத்துள்ளார். இப்படத்தில் என் மூத்த மகனாக பாரியும், இளைய மகனாக சுதர்சனும் நடித்துள்ளனர்.

அன்பே டயானா ரோஜா
அன்பே டயானா ரோஜா

மேலும், இப்படத்தின் டப்பிங் பேசும்போது எனக்கே கண்ணீர் வந்தது. கேமராமேன் ஷெல்லி ப்ரோ சிங்கிள் ஷாட்களுக்காக கிம்பல் தூக்கிக்கொண்டு மிகவும் ரிஸ்க் எடுத்து உழைத்துள்ளார். மியூசிக் டைரக்டர் பரத் சங்கர் நல்ல பாடல்களைத் தந்துள்ளார். நிறைவாக உணர்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *