அனிருத் – காவ்யா மாறன் திருமணம் சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றிருந்தது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டத்தினர் முன்னிலையில் அத்திருமணம் நடைபெற்றிருந்தது.
இன்று சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியும் கடிதம் மூலமாக வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, “செல்வி காவியா மற்றும் அனிருத் ஆகியோர் வாழ்நாள் முழுவதுமான நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து இல்லறப் பயணத்தைத் தொடங்கும் இந்த இனிய திருமண நன்னாளில், அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மணமக்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் ஒருவர் மீதான அன்பையும் பாசத்தையும் மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நீடூழி வாழ்ந்து, குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் வழிவகுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இன்று நடைபெறும் இத்திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முக்கியமான நன்னாளில் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.