ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். இந்த சம்பவத்திற்கு சற்று முன்னர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து கடும் வாக்குவாதம் மற்றும் பலத்த சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு சஞ்சலிகாவை கைது செய்தனர்.
இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் சயான் பால் என்பவர் கூறுகையில், “ஒரு பெண் அழுது உதவி கேட்கும் போது நாங்கள் இன்னும் விழித்திருந்தோம். நாங்கள் உடனடியாக அவர்களது பிளாட்டுக்கு விரைந்தோம். படுக்கையில் ஒரு இளைஞன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டோம். எங்கள் உதவியை நாடிய பெண்ணின் கழுத்தில் பல கீறல்கள் இருந்தன. நாங்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம்,” என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக சஞ்சலிகாவின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மௌமிதாவிற்கு இச்சம்பவத்தில் உள்ள பங்கு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடந்தபோது அவர் அங்கு இருந்தாரா என்பதையும், இந்தச் சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் நேரடி தொடர்பு இருந்ததா என்பதையும் கண்டறிய போலீஸார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.