Asian Games: Recurve வில்வித்தையில் முதல் தங்கம்; 44 ஆண்டு கால கொரிய ஆதிக்கத்துக்கு இந்தியா முடிவுரை | india ends Korea’s 44-year dominance with historic Asian Games recurve gold medal

Spread the love

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் Recurve வில்வித்தை என்றாலே கடந்த 44 ஆண்டுகளாக தென் கொரியாவின் ஆதிக்கம்தான். உலக சாம்பியனான அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இந்த முறை களத்தில் இருந்த இந்திய அணிக்கு அந்த வரலாறு ஒரு தடையாகத் தெரியவில்லை.

அங்கிதா பகத், கீர்த்தி சர்மா, கும்கும் மொஹோத் ஆகியோர் இணைந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் Recurve Team பிரிவில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்றதுடன், கொரியாவின் 44 ஆண்டுகால ஆதிக்கத்துக்கும் முடிவு கட்டியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக அரையிறுதியில் சீனாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது இந்திய அணி. ஆனால் இறுதிப்போட்டியில் எதிரே இருந்தது உலகின் முன்னணி வீராங்கனைகளைக் கொண்ட கொரியா. போட்டி தொடங்கியதும் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

முதல் இரண்டு செட்களிலும் இரு அணிகளும் விடாப்பிடியாக மோதின. கொரியா 54, 56 புள்ளிகளை எடுக்க, இந்தியாவும் அதே ஸ்கோரைப் பதிவு செய்தது. இரண்டு செட்களும் சமன் ஆனதால் 2-2 எனப் போட்டி பரபரப்பாகச் சென்றது.

மூன்றாவது செட்டில் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கொரியாவின் ஆறு அம்புகளில் நான்கு முறை 8 புள்ளிகளே வர, இந்திய அணி 55 புள்ளிகளைக் குவித்தது. இதனால் இந்தியா முன்னிலை பெற்றது.

இனி ஒரே ஒரு செட்… இந்தியாவுக்கு 54 புள்ளிகள் கிடைத்தால் போதும். தங்கம் கைக்கு எட்டும் தூரத்தில்!

கடைசி செட்டில் கொரியா 54 புள்ளிகளை எடுத்துவிட்டது. இந்தியாவும் 54-ஐ எட்டினால்தான் தங்கம்! இந்த நிலையில் கீர்த்தி சர்மா அடித்த அம்பு முதலில் 8 எனக் கணக்கிடப்பட்டது. ஆனால் Review இல் அது 9 என மாறியதும் இந்தியாவின் ஸ்கோரும் 54-க்கு வந்தது. செட் சமநிலையில் முடிய… இந்தியாவின் தங்கம் உறுதியானது!

இந்த வெற்றியின் மற்றொரு சுவாரஸ்யம், இந்த மூவரின் பின்னணிதான். கும்கும் மொஹோத் Recurve வில்வித்தையில் பயிற்சி பெறத் தொடங்கியே மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் மூங்கில் வில்லைக் கொண்டு பயிற்சி செய்தவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *