இப்போது அந்தப் பேருந்தைப் பற்றிய ஒரு வீடியோவைப் பார்த்து, நிறைய பேர் எனக்கு அனுப்பி, அந்தப் பேருந்தையே வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். நானும் அதைப் பற்றி விசாரித்தேன். ஆனால், அந்தப் பேருந்து இல்லை, வேறு பேருந்து என்று சொன்னார்கள்.
முதன்முதலில் நிமிஷாவைப் பார்த்தபோது, சென்று ஹாய் சொன்னேன். கொஞ்சம் ஃபார்மலாக இருந்தது. ஆனால், மதிய ஷூட்டிலேயே “வா, ஸ்ருதி, போலாம்’ என்று, முதல் நாளிலிருந்தே அந்த வைப்தான் இருந்தது.

நிமிஷா எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். ஒரு படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் எனப் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தார். ஆனால், அந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகு உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட்டார். அதுதான் அவரின் டெடிகேஷன்” என்றார்.
