விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10, விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
“முனியம்மாதான் இந்த சீசனில் டைட்டில் வாங்கப் போறாங்க’ என்கிறார்கள் சிலர். `வாசன் வர்றதுக்கு முன்னாடி வரை அவங்களுக்கு வாய்ப்பு இருந்திச்சு, ஆனா இப்ப நிலைமை அப்படியில்ல, வாசனுக்குத்தான் டைட்டில் என்கிறார்கள்’ வேறு சிலர்.
அந்தப் பக்கம் போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் டைட்டிலை நோக்கியே தங்களது கேமை ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு கடைசி வரை அந்த வீட்டில் இருந்ததுடன் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பணப்பெட்டியை எடுத்து வேளியேறிய அமுதவாணனிடம் பேசினோம்.
”பிக்பாஸ் நிகழ்ச்சியில ஆறாவது சீசன்ல கலந்துகிட்டேன். நிகழ்ச்சியில வைக்கப்பட்ட டாஸ்குகள்ல பெரும்பாலான டாஸ்குகள்ல ஜெயிச்சேன். ஆனா டைட்டில் அசீமுக்குக் கிடைச்சது.
ஆனாலும்கூட கடைசிக் கட்டத்துல பணப்பெட்டியை எடுத்துட்டு வெளியேறிய என் முடிவு சரியானதுதாங்கிறதுல இப்பவரை தெளிவாதான் இருக்கேன்.
நிகழ்ச்சியில இருந்து வெளியில வந்த புதுசுல நிறையப் பேர் எங்கிட்ட , ‘நீங்க இருந்திருந்தா டைட்டில் வாங்கியிருக்கலாம்’னு சொன்னாங்க. ஆனா அந்த வீட்டுக்குள் இருந்த எனக்கு கேமின் போக்கு தெரியுமில்லையா, அதைத் தெரிஞ்சு முடிவெடுக்கிறதுதானே புத்திசாலித்தனம்?
அதேநேரம், ஆடியன்ஸ் தரப்புல டாஸ்குகள்ல எல்லாம் ஜெயிக்கிறவங்களுக்குத் தானே டைட்டில் கிடைக்கணும்னு சொல்றதும் நியாயமாத்தான் படுது” என்றவரிடம்,