Bhagyaraj: "கண்களை மட்டும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்!" – பாக்யராஜின் அலுவலகத்திலிருந்து கடிதம்!

Spread the love

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கடந்த 27-ம் தேதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரைப்பிரபலங்கள் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு 28-ம் தேதி பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது பாக்யராஜின் அலுவலக சமூக வலைதளக் கணக்கில் இருந்து கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

Bhagyaraj
Bhagyaraj

அந்தக் கடிதத்தில், “சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது” நான் எழுதிய இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக்கிய என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன்.

அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டுவிட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன்.

என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” பார்த்தீர்களா? இன்னும்….. கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்! வரும்போதே expiry date குறிக்கப்படாத உடல் இது.

என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிருகப்பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது. இனி நான்…. நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *