கடலை ஒட்டிய நிலப்பரப்பு, உயரமான தேவாலயங்கள், சிறைகளின் குறுகிய அறைகள் ஆகியவற்றோடு லிங்கத்தின் வன்முறைப் பக்கத்தையும் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். அந்த விஷுவல்களில் ஒரு கேங்ஸ்டர் சினிமாவுக்கு தேவையான ‘டச்’களையும் இணைத்திருக்கிறார். முதல் மூன்று எபிசோடுகளை படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பின்னிய விதத்திற்குப் பாராட்டுகள்! ஆனால், அதன் பிறகு நிதானமில்லாமல் ஓடும் எபிசோடுகளை ஒரே கோட்டில் அடுக்காமல் விட்டிருக்கிறார். இந்த வெப் சீரிஸில் பாடல்களையும் காட்சிகளோடு இணைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி ப்ரிட்டோ. ஆனால், அதில் நினைவில் தங்கும் புதுமை டச் இல்லை.

பின்னணி இசையில் சண்டைக் காட்சிகளின் மாஸ் தன்மைக்கு நெருப்பூட்டியிருக்கிறார். ஆனால், நிறைய இடங்களில் தேவைப்படும் அந்தப் பரபர இசை மிஸ்ஸிங்!
90-களில் கட்டப்பட்ட வீடுகள், அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருட்கள் என கதையின் பீரியட் தன்மைக்கு, கலை இயக்குநர்கள் குழுவும், ஆடை வடிவமைப்பாளர்கள் குழுவும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறது.