இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜுன், “சனாதனம் என்பது வாழ்க்கையின் வழி. நம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டோம், எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது இது.
தவறு செய்யக் கூடாது, திருடக் கூடாது, மற்றவர்களின் பொருள்களுக்கு ஆசைப்படக் கூடாது என்பதும் சனாதன தர்மம்தான். சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், அவரவர் அப்பா, அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும்.
சனாதன தர்மம் என்பது மதம் சார்ந்தது கிடையாது. அது வாழ்க்கையின் வழி. எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.
அதை அனைவரும் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்” என்றவர் விஜய் பற்றி, “இப்போதுதானே தொடங்கியிருக்கிறார். நிச்சயமாக அனைவருக்கும் நல்லது செய்வார். அதற்கான அறிகுறிகள் இப்போது தெரிகிறது” எனப் பேசினார்.