ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் விரிவாக்கத்தில் இது அடுத்த முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் Jioவும், குளிர்பான சந்தையில் Campaவும் விரிவுபடுத்தியுள்ள நிலையில், தற்போது ஐஸ்க்ரீம் சந்தையிலும் தனது தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் களமிறங்கியுள்ளது.
RCPL இயக்குநர் T. Krishnakumar, “dairy shouldn”t need shortcuts” என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் Bombay Creamery உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உண்மையான டெய்ரி கிரீமைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் உண்மையான ஐஸ்க்ரீமின் சுவையை வழங்குவதுடன், இந்தியக் குடும்பங்கள் வாங்கக்கூடிய விலையில் அதை வழங்குவதே நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே Amul, Vadilal, Mother Dairy, Kwality Wall’s, Arun உள்ளிட்ட நிறுவனங்கள் வலுவாக இருக்கும் ஐஸ்க்ரீம் சந்தையில், ரிலையன்ஸின் இந்தப் புதிய வரவு கவனத்தை ஈர்த்துள்ளது. ₹10 முதல் விலை, உண்மையான டெய்ரி கிரீம் மற்றும் வலுவான விநியோகக் கட்டமைப்புடன் களமிறங்கியுள்ள Bombay Creamery, நாடு முழுவதும் விரிவடையும்போது இந்திய ஐஸ்க்ரீம் சந்தையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.