BRICS மாநாட்டில் மோடி: காலநிலை மாற்றம், பேரிடர் குறித்து முக்கிய பேச்சு|‘No Crisis Stays Local’: Modi’s Big BRICS Warning

Spread the love

அதனால், எந்தவொரு நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. எனவே, பிரிக்ஸ் அமைப்பிற்குள் சவால்களை எதிர்கொள்ளும் மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கு நாம் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

அதேபோல், சவால்களை உடனுக்குடன் கண்டறிவதும், அவற்றுக்குத் தயார்நிலையில் இருப்பதும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசியமாகும்.

இந்த அணுகுமுறையின் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் ‘பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு’ குறித்துப் பொதுக்கருத்து எட்டப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் மேலாண்மைக்காக ‘முன்கூட்டிய எச்சரிக்கை தரவு ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களும்’ உருவாக்கப்பட்டுள்ளன” என்று பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *