₹505-க்கு இவ்வளவு வசதியா? Wi-Fi, TV, Pantry, Toilet… வைரலான கேரளா “Business class” அரசு பேருந்து!| Kerala’s Viral “Business Class” Government Bus Has WiFi, TV, Pantry and Toilet

Spread the love

நீண்ட தூரப் பயணத்தில் பயணிகளுக்கு வசதியாக பேருந்துக்குள்ளேயே Toilet வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தனை வசதிகளைக் கொண்ட இந்தப் பேருந்தைதான் ஹர்ஷ் கோயங்கா தனது பதிவில் கேரளாவின் “Business Class” சேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேருந்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்படுகிறது. காலை 5.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பேருந்து, கொல்லம், ஆலப்புழா மற்றும் High Court வழியாகச் சென்று காலை சுமார் 9.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது. மாலை 5.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மீண்டும் புறப்படுகிறது.

இதற்கான கட்டணம் ₹505 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளை KSRTC இணையதளம், Ente KSRTC Neo OPRS App, Booking Counter அல்லது KSRTC-யின் அங்கீகரிக்கப்பட்ட WhatsApp எண் மூலம் முன்பதிவு செய்யலாம்.

“Business Class” என்ற பெயருக்கு ஏற்ற வசதிகளுடன் இயங்கும் இந்தப் பேருந்து, வெறும் ₹505 கட்டணத்தில் இப்படி ஒரு பயண அனுபவத்தை வழங்குவதுதான் தற்போது இணையத்தில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ஒரு பதிவு… கேரளாவின் இந்த பேருந்து சேவையைப் பலருக்கும் தெரிய வைத்திருக்கிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *