அந்த நேரத்தில் மன உறுதியை இழக்காமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடினார் ஆயுஷ். இறுதியில் மூன்றாவது ஆட்டத்தையும் 21-19 எனக் கைப்பற்றினார்.
இதன்மூலம் 21-14, 13-21, 21-19 என்ற கணக்கில் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான ஷி யூ கியை வீழ்த்தி, உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ஆயுஷ் ஷெட்டி. இந்தப் பரபரப்பான போட்டி மொத்தம் 73 நிமிடங்கள் நீடித்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஆயுஷ்,
ஷி யூ கி மீண்டும் போட்டிக்குள் வந்தபோது தனக்கு பதற்றம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சிந்துவும் வெற்றி… இந்தியாவுக்கு 5-க்கு 5!
ஆயுஷ் ஷெட்டி உலக சாம்பியனையே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், முதல் நாளில் களமிறங்கிய மற்ற இந்திய வீரர்களும் தோல்வியின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்து, சோஃபியா நோபிளை 21-7, 21-11 என்ற நேர் ஆட்டங்களில் வெறும் 29 நிமிடங்களில் வீழ்த்தினார்.
மேலும், ஹரிஹரன் அம்சகருணன் – எம்.ஆர். அர்ஜுன், த்ரீசா ஜாலி – காயத்ரி புல்லேலா கோபிசந்த், கவிப்ரியா செல்வம் – சிம்ரன் சிங்கி ஆகிய இந்திய இரட்டையர் ஜோடிகளும் தங்களது முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதன்மூலம் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்குக் கிடைத்த ஐந்து வாய்ப்புகளிலும் ஐந்து வெற்றிகள் கிடைத்துள்ளன.
ஒருபக்கம் சிந்து உள்ளிட்ட வீரர்கள் வெற்றியுடன் பயணத்தைத் தொடங்க… மறுபக்கம் உலகின் முதல் நிலை வீரரையே வீழ்த்தி உலக பேட்மிண்டன் அரங்கில் தனது மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார் ஆயுஷ் ஷெட்டி!