Caste: “பொது மயானத்தில் புதைத்தால் வேலை தர மாட்டோம்” ஈரோடு இளைஞரின் சாதி ஆணவ பேச்சு! என்ன நடந்தது? – erode caste discrimination update .

Spread the love

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமுதாய மக்களை அருகில் உள்ள பொது மயானத்தை பயன்படுத்த விடாமல் தீண்டாமை காரணமாக ஆதிக்க சாதியினர் தடுத்து வந்துள்ளனர். சாதிய கொடுமைக்கு பயந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள மயானத்தில் பட்டியல் சமுதாய மக்களின் இறுதி சடங்குகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், பெரும்பாளியைச் சேர்ந்த சென்னி என்ற 90 வயது நபர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 5-ம்‌ உயிரிழந்திருக்கிறார். வழக்கமாக பட்டியல் சமுதாய மக்களை புகைக்கும் அந்த மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால் அருகில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய பட்டியல் சமுதாய மக்கள் முயற்சி செய்துள்ளனர்.

சாதிய தீண்டாமை

சாதிய தீண்டாமை

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினரான பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் தடுத்துள்ளனர். பெரும்பாளி பட்டியல் சமுதாய கிராமத்தினரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்றுள்ளனர். அதையும் மதிக்காத ஆதிக்க சாதியினர், தடுத்து மிரட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த ரிதுவர்மன் என்ற இளைஞர், ” இந்த பொது மயானத்தில் பட்டியல் சாதியினரின் உடலை அடக்கம் செய்தால், பட்டியல் சமுதாய மக்கள் யாரையும் எங்களின் தோட்டத்தில் வேலைக்கு சேர்க்க மாட்டோம். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என சாதிய ஆணவத்துடன் மிரட்டியிருக்கிறார். இந்த பேச்சைக் கேட்டு பயந்த பட்டியல் சமுதாய தொழிலாளர்கள் இரண்டு பேர், ரிதுவர்மன் காலில் விழுந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *