அந்த போலி மொபைல் செயலிகளை பயன்படுத்தி இணைய மோசடி கும்பல் நாடு முழுவதும் 64 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் மோசடி செய்துள்ளனர்.சைபர் மோசடிக்கு முக்கிய காரணமான ரோஹித் ஜார்க்கண்ட், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சைபர் மோசடி கும்பல்களுக்கு மொபைல் போன்களில் பணத்தை அபகரிக்க பயன்படும் APK கோப்புகளை உருவாக்கி விற்பனை செய்துள்ளார்.
ரோஹித் இரண்டு வகையான செயலிகளை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்று, பயனர்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யும் ‘பாதிக்கப்பட்டவர் செயலி’ (victim app), மற்றொன்று, மோசடி செய்பவர்கள் OTP-கள், வங்கிச் சான்றுகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் நிர்வாகி செயலி’ (admin app). ஆகும். இந்த போலியான செயலிகள், SBI, PNB, Axis Bank, UCO Bank, ICICI Bank, Union Bank, BigBasket, American Express, ஆதார் சேவைகள், PM Kisan மற்றும் RTO அபராதத் தொகை செலுத்தும் இணையதளங்கள் உள்ளிட்ட பல நம்பகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளைப் போலத் தோற்றமளித்தன.
போலீஸார் ரோஹித்தின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை ஆய்வு செய்தபோது அவர் 121 போலி APK செயலிகளை உருவாக்கியதும், அவை நாடு முழுவதும் 21,672 மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.