ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும்.
அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்த வெற்றியின் மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.
வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ருதுராஜ், ”ஆட்டம் சற்று நெருக்கமாகத்தான் சென்றது. ஆனால் 200 ரன்களைத் துரத்தும்போது, ஆட்டம் எப்போதும் கடைசி ஓவர்கள் வரை செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்.