பிரிந்த Lovers ஒன்று சேருவது முதல் குழந்தை பாக்கியம் வரை – இன்றைய ராசிபலன் (13.06.2026) – Kumudam

Spread the love

மேஷம்: 

தன்னம்பிக்கை தான் உங்கள் பலம். இன்று தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தென்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தடைகளெல்லாம் நீங்கும்.பணவரவு அதிகரிக்கும்.

மிதுனம்: 

புதிய முயற்சிகள் பலனைத் தரும். தடைபட்டிருந்த காரியங்கள் நன்றாக முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் கொள்வது நல்லது. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.பெண்களுக்கு வேலை கிடைக்கும்.

கடகம்: 

சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். உங்களின் தேக ஆரோக்கியம் சிறக்கும்.

சிம்மம்: 

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. புது சிந்தனையால் தெளிவு பெறுவீர். பூர்வீக சொத்து பிரச்சினையில் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உற்சாகமான நாளாக அமையும்.

கன்னி: 

திடீர் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.  நட்பால் ஆதாயம் உண்டு. செலவுகள் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும்.

துலாம்: 

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்: 

சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும். குடும்பத் தலைவிகள் தங்க ஆபரணங்களை வாங்கிவிடுவர். கண் பிரச்சினை தோன்றும். பிடித்தவர்களின் எதிரபாராத சந்திப்பு நிகழும். 

தனுசு: 

பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. உடன் பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

மகரம்: 

வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.  குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.பயணங்கள் நன்மையில் முடியும்.

கும்பம்: 

பிரபலமானவர்களால் நன்மை உண்டு. எதிரிகள் விலகிப் போவர். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

மீனம்: 

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தேகம் பொலிவு பெறும். பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *