CSK vs SRH : நீங்க ஜெயிக்கணுங்றதை மறந்துட்டீங்களே சிவாஜி!' – சேப்பாக்கத்தில் சரிந்த சி.எஸ்.கே!

Spread the love

அவன் நமக்காக ஜெயிக்கிறான், இவன் நமக்காக ஜெயிக்கிறான்னு சொல்றியே, முதல்ல நீ உனக்காக ஜெயிச்சு காட்டுடா!’ என்கிற மீமை நிஜமாக்கி காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ப்ளே ஆப்ஸ் செல்ல மற்ற அணிகள் சி.எஸ்.கேவுக்கு சாதகமாக ஆடினாலும் சென்னை அணி மட்டும் வம்படியாக தோற்றுக் கொண்டிருக்கிறது.

CSK vs SRH
CSK vs SRH

சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஓப்பனர்கள் என்னவோ ஆளுக்கு 100 ரன்களை குவிப்பார்கள் என்ற நோக்கத்தில் டாஸ் வென்ற ருதுராஜ் பேட்டிங் தேர்வு செய்ய, ஆரம்பத்தில் அதிரடி காட்டினார் சஞ்சு சாம்சன். ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவுட் ஆனது மட்டுமில்லாமல், ஒரு ரிவியூவையும் வேஸ்ட் ஆக்கி சென்று விட்டார்.

வழக்கம் போல தனது ஸ்டைலில் டெஸ்ட் மேட்ச் ஆடிக்கொண்டு ருதுராஜ் ஒரு பக்கம் இருக்க, உர்வில் பட்டேலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஆனால் கார்த்திக் சர்மா கொடுத்த 14 கோடிக்கு நேர்மையாக 32 ரன்கள் சேர்த்து அவரும் அவுட் ஆக, எதிர் முனையில் இருக்கும் ருதுராஜ், மீதம் இருக்கும் ஓவர்களையாவது அடுத்த பேட்டர்களுக்கு கொடுப்போம் என்ற நல்ல எண்ணத்தோடு 21 பந்துகளில் சிக்ஸர், பவுண்ட்ரி எதுவும் இல்லாமல் 15 ரன்கள் அடித்து அவரும் வெளியேறினார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் பிரேவிஸ் மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடியதன் மூலம், இருபது ஓவர் முடிவில் 180 என்ற இலக்கை நிர்ணயித்தது சென்னை.

Dhoni
Dhoni

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் சற்று பொறுமையாகவே தனது கியரை மாற்றியது. ஆனாலும் ஹெட், அபிஷேக் சர்மா அவுட் ஆனாலும், அடுத்து வந்த இஷான் கிஷன் மற்றும் க்ளாசன் இணையினர் போட்டியை அப்படியே தூக்கிச் சென்று வெற்றிக்கு அருகில் வைத்தனர்.

ஆனாலும் இந்த போட்டியில் ட்விஸ்ட் இருக்கா என்ற எண்ணத்தை சென்னை ரசிகர்களுக்கு கொடுத்தார்கள் பவுலர்கள். நன்றாக விளையாடிய க்ளாசன், இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தாலும், கடைசியில் என்னவோ வெற்றி ஹைதராபாத் அணிக்குத்தான்.ஒரு ஓவர் மீதம் இருக்கும் போதே 181 ரன்களை எட்டி சென்றனர்.

கிட்டத்தட்ட பிளே ஆப் கனவு முடிவுக்கு வந்த நிலையில் துவண்டு கிடந்த ரசிகர்களை, போட்டி முடிந்த பிறகு களத்திற்கு வந்த தோனி கைகளை காட்டி குஷிப்படுத்தி அனுப்பிவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *