CWG 2026: Gulveer Singh wins historic silver medal in 10,000m | CWG 2026 : 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் வரலாற்றுச் சாதனை!

Spread the love

உலக தடகளத்தின் மிகக் கடினமான பிரிவாகக் கருதப்படும் 10,000 மீட்டர் நீண்ட தூர ஓட்டத்தில் இந்தியா புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் 10,000 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த குல்வீர் சிங் (28), 10,000 மீட்டர் தூரத்தை 27:49.78 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய தடகளத்தின் புதிய திசையைக் காட்டும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

குல்வீர் சிங்

குல்வீர் சிங்
Eranga Jayawardena

10,000 மீட்டர் என்பது வெறும் வேகப் போட்டியல்ல. 25 சுற்றுகள் முழுவதும் உடல் வலிமை, மன உறுதி, சரியான திட்டமிடல் மற்றும் இறுதிக்கட்டத்தில் வேகத்தை உயர்த்தும் திறன் ஆகியவை ஒன்றாகச் செயல்பட வேண்டிய சவாலான போட்டி. உலக அளவில் கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பிரிவில் இந்திய வீரர் பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *