Cyber War: “நாட்டை சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்” – பிரதமர் மோடி| Cyber ​​War: “The country must be protected from cyber-terrorists” – Prime Minister Modi

Spread the love

1960 மற்றும் 70-களில் ஏழைகளின் பெயரால் கொண்டுவரப்பட்ட வங்கி தேசியமயமாக்கல் திட்டம் ஏழைகளைச் சென்றடையவே இல்லை. 2014 வரை நாட்டின் பாதியளவிலான மக்கள் வங்கி அமைப்பிற்கு வெளியேதான் வைக்கப்பட்டிருந்தனர். 1985-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒடிசாவில் பேசுகையில் ‘டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைகிறது’ என்று கூறினார். ஆனால், தற்போதைய ஆட்சியில் தொடங்கப்பட்ட 59-60 கோடி `ஜன் தன்’ கணக்குகள் மூலம் டெல்லியிலிருந்து அனுப்பப்படும் முழுத் தொகையும் நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளைச் சென்றடைகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமெடுத்து வரும் சூழலில், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி அமைப்புகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இன்றைய காலத்தில் ஆயுதங்களை ஏந்திப் போராடும் மரபுசார் போர்கள் மட்டுமன்றி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் போருக்கு நிகரானவையே. இந்தியாவின் பொருளாதார வலிமை அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் வங்கி அமைப்பையும் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் ‘சைபர் பயங்கரவாதிகளிடம்’ இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தச் சூழலில் ஒடிசாவில் திறக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம், நாட்டின் நிதித்துறையின் பாதுகாப்பையும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் திறனையும் மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *