இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளம் பெண்ணின் மருத்துவ அறிக்கை துண்டு சீட்டை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இதனைப் பார்த்த நீதிபதி கடும் கோபமடைந்தார். “இந்த வழக்கில் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நலம் குறித்து முழுமையாக பரிசோதனை செய்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் டீம் அறிக்கை தாக்கல் செய்ய நான் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால் மருத்துவக் கல்லூரி தரப்பில், அந்தப் பெண்ணின் கருக்கலைப்பு குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்துகிறது.

உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னால், அந்தப் பெண்ணின் கருக்கலைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மருத்துவக் கல்லூரியின் டீன் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு நபர்… இவ்வாறு எப்படிச் செயல்பட்டார் என்பது இந்த நீதிமன்றத்திற்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.