D56: "பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம்" – எஸ்.ஜே.சூர்யா

Spread the love

‘ஓம்’ படத்தைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

'D56'
‘D56’

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் இன்று காலை தொடங்கி இருக்கிறது.

பூஜைக்கு பிறகு பேசிய எஸ்.ஜே. சூர்யா, “பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு, இன்று ‘D56’படத்தின் பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.

தமிழரசன் பச்சமுத்து அவர்கள் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலமே தனது அசாத்திய திறமையை நிருபித்த ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.

'D56'
‘D56’

அதே போன்றதொரு வலுவான எழுத்துத் திறமையை ‘D56’ திரைப்படத்திலும் நீங்கள் பிரமாண்டமான அளவில் காண்பீர்கள். ஒரு நல்ல குழுவுடன் உருவாகும் இந்த மண்ணின் சார்ந்த கதை வெற்றிபெற வாழ்த்துகள்!” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *