DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

Spread the love

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR), ‘DAC டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனது புதிய சாட்டிலைட் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.

இந்த திறப்பு விழாவில் Yubi குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கௌரவ் குமார் சிறப்பு விருந்தினராகவும், DAC டெவலப்பர்ஸின் நிறுவனர் மற்றும் மேலாண்டிருநர் திரு. சதீஷ் குமார் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

DAC டெவலப்பர்ஸ்
DAC டெவலப்பர்ஸ்

Yubi உடனான வலுவான கூட்டாண்மை

DAC டெவலப்பர்ஸ் மற்றும் Yubi ஆகியவை சென்னையில் இரண்டு முக்கியமான நிதி பரிவர்த்தனைகளில் வெற்றிகரமாக இணைந்து செயல்பட்டுள்ளன. இதன் மூலம் Yubi நிறுவனம் ₹66 கோடி நிதி வழங்கியுள்ளது.

இந்த வெற்றிகரமான கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இனிவரும் ஒரு வருட காலகட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் திட்டங்களுக்காக ₹250 கோடி மதிப்பிலான புதிய கூட்டாண்மை திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்கள் இறுதிப்படுத்தப்பட்டு விரைவில் முறைப்படி கையொப்பமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DAC Cambridge — சென்னையின் முதல் English-themed residential

development!

இந்த விழாவில் மிகவும் சிறப்பான அறிவிப்பாக, DAC Cambridge என்ற புதிய குடியிருப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் நகரின் கட்டடக்கலை அழகும் தனித்தன்மையும் இந்த திட்டத்திற்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

DAC டெவலப்பர்ஸ்
DAC டெவலப்பர்ஸ்

சென்னையின் IT தளத்தில் உருவாகவிருக்கும் இந்த உயர்தர குடியிருப்பு சமூகம்:

தனித்துவமான கட்டடக்கலை வடிவமைப்பு

அழகிய பசுமை திட்ட வெளிகள்

சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட வாழ்வு சூழல்

ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் OMR பகுதியில் இது போன்றதொரு English-themed குடியிருப்பு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *