Deemed University: “இது அலட்சியமா அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா?” – அண்ணாமலை கேள்வி | Annamalai has raised questions regarding the issue of the deemed medical college.

Spread the love

நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறினாலும் குறிப்பிட்ட சதவீத இடங்களை மாநிலக் கோட்டாவிற்கு வழங்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்தும் வழிகளும் பரிசீலிக்கப்படும். இனிவரும் காலங்களில் எந்தவொரு தனியார் கல்லூரியும் இதுபோன்ற சட்டத் துவாரங்களைப் பயன்படுத்தாதவாறு ஒழுங்குமுறை கட்டமைப்பு பலப்படுத்தப்படும். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தற்போது நிர்வாகக் குழு செயல்பட்டு வரும் நிலையில், NOC கோரி வரும் விண்ணப்பங்கள் மீது 60 நாட்களுக்கு மிக முன்னதாகவே தகுந்த காரணங்களுடன் கூடிய தெளிவான உத்தரவை பிறப்பிக்க அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

அருண் ராஜ்

அருண் ராஜ்

அமைச்சரின் பதில் தொடர்பாக வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *