Defamatory remarks against Raj Thackeray: Social media personality forced to apologize with a slipper on his head.-ராஜ்தாக்கரே குறித்து அவதூறு: சோசியல் மீடியா பிரபலத்தை தலையில் செருப்புடன் மன்னிப்பு கேட்டவைப்பு

Spread the love

மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுபம் குறித்து புனேயை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் மகேஷ் மோடே சோசியல் மீடியாவில் அவதூறாக செய்தி வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கட்சியினர் கடும் கோபத்தில் மகேஷ் மோடேயை தேட ஆரம்பித்தனர்.

அவர் கடந்த சில நாட்களாக கேரளா சென்று இருந்தார். அவர் புனே திரும்பியது குறித்து கேள்விப்பட்டு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மகேஷ் மோட்டேவை நவநிர்மான் சேனா கட்சியினர் பிடித்து, ராஜ் தாக்கரேவின் புகைப்படத்திற்கு முன் அவரைச் சாஷ்டாங்கமாக வணங்க வைத்தனர்.

சுபம், ராஜ் தாக்கரே

சுபம், ராஜ் தாக்கரே

அதுமட்டுமின்றி, அவரது முகத்தில் கருப்பு மையைப் பூசியும், தலையில் செருப்பை வைத்துக்கொண்டு உட்கார்ந்து எழும் பயிற்சிகளைச் (sit-ups) செய்ய வைத்தும், பின்னர் மன்னிப்பு கேட்க வைத்தனர். தான் வெளியிட்ட ரீல்ஸ்க்காக மகேஷ் அழுதபடி ராஜ் தாக்கரே படத்தின் முன்பு விழுந்து மன்னிப்புக்கேட்டார். மேலும் ராஜ் தாக்கரேயிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேற்கொண்டு துன்புறுத்த வேண்டாம் என்று கைகூப்பி மகேஷ் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் மகேஷ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் அறியாமையால் ராஜ் சாஹேப் குறித்துத் தவறான ஒன்றைக் கூறிவிட்டேன். அதேபோல் அக்கட்சி தலைவர்களில் ஒருவரான சுபம் தாடா மற்றும் பிற எம்.என்.எஸ் நிர்வாகிகளைப் பற்றியும் தவறான முறையில் பேசிவிட்டேன். இன்று எனது தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். அந்த “ரீல்’ வீடியோவின் காரணமாகவே நான் இந்த இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டேன். நவநிர்மான் கட்சியின் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கோருகிறேன்,” என்று முகத்தில் அச்சம் தெரிய, கண்ணீர் மல்க மகேஷ் அந்த மன்னிப்பு வீடியோவில் கூறி இருந்தார்.

புனே ஹடாப்சர் சட்டமன்றத் தொகுதி நவநிர்மான் சேனா துணை தலைவரான சுபம் ஜக்டேல் இது குறித்து கூறுகையில்,” சுமார் 15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில் எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து மகேஷ் மோடே மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதையடுத்து அவருக்கு அலுவலகத்தில், ‘மஹாபிரசாத்’ வழங்கப்பட்டது. ராஜ் தாக்கரேவை அவமதிக்கும் எவரும் இதே நிலையை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *