திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டெலிவரி பாய்’.
இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக இன்று வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லியோனி, ” ‘டெலிவரி பாய்’ படம் ஒரு கூட்டு முயற்சியில் உருவானப் படம். என் மகனுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். காரணம் பலருடைய உழைப்பு இணைந்திருக்கிறது.

லியோனி மகனா நீ? உனக்கு எதற்கு சினிமா எல்லாம் என்று கேட்பார்கள். இதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் லியோனி மகன் என்பதாலேயே கிடைக்காமல் போயிருக்கிறது. லியோனி மகன் என்று பாராமல் சிவக்குமார் என்றவரின் திறமையைப் பாருங்கள்.
என் மகனுக்கு இனி நல்ல கதைகள் அமைந்து சினிமா துறையில் ஜெயிக்க வேண்டும். சினிமா அதனை நம்பியவர்களை கைவிட்டதாக சரித்திரமே இல்லை. சினிமாவிற்காக உழைப்பவர்கள் நிச்சயம் வென்றுவிடுவார்கள். என் மகன் நிச்சயம் இந்தத் துறையில் வென்றுவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.