Dileep: "என் தரப்பு உண்மையை எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்…" – திலீப் ஓபன் டாக்

Spread the love

மலையாள நடிகர் திலீப், கத்தாரில் நடைபெற்ற ‘திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்’ அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Dileep's Neekam Film
Dileep’s Neekam Film

கடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், “எனக்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்திற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.

கடந்த 10 வருடங்களாக என் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், என் தரப்பு உண்மையை என் வழியில் எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்தான் நான் தள்ளப்பட்டிருந்தேன். தாயார்கள், சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் சிறு குழந்தைகள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

அந்தப் பிரார்த்தனைகளின் பலனால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். அந்த மாபெரும் சுனாமியில் நான் சிக்கித் தவித்தபோது என்னை விழாமல் தாங்கிப் பிடித்தவர்கள் நீங்கள்தான்.

நான் உறுதியாக நிற்க உங்கள் பிரார்த்தனைகளே உதவியது. உங்கள் ஒவ்வொருவரின் கைகளையும் பிடித்து நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல விரும்புகிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஜெகன் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், திலீப் நடிப்பில் ‘நீக்கம்’ படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *