Disproportionate assets case against former minister Anita Radhakrishnan, spanning over 20 years, concludes with the acquittal of all 7 accused-20 ஆண்டுகளைக் கடந்த அனிதா ராதாகிருஷ்ணின் சொத்துக்குவிப்பு வழக்கு

Spread the love

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகக் கூறி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் என மொத்தம் 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் Spl.C.No.3/2019 என்ற எண்ணில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 79 சாட்சிகளும், எதிர்தரப்பில் 6 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு தரப்பில் 312 ஆவணங்களும், எதிர்தரப்பில் 74 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருதரப்பு விசாரணைகளும் நிறைவடைந்தது.   

இதற்கிடையே, இந்த வழக்கை மதுரையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தள்ளுபடி செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *