Paris Cafe: “நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்” – நடிகை அனுமோல் பேச்சு| Paris Cafe: “An important matter none of us can avoid” – Actress Anumol speaks.

Spread the love

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள “பாரிஸ் கபே’ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அனுமோல்,“நாங்கள் இந்தத் திரைப்படத்தின் மூலம் மிகவும் முக்கியமான ஒரு கருத்தை பேசியிருக்கிறோம். நான் எப்போதுமே ஒரு புதிய படத்தைக் கையிலெடுக்கும் போது, அதை ‘முக்கியமான கருத்தைக் கொண்ட கதை’ என்றே சொல்வேன்.

ஏனெனில், ஒரு கதையைக் கேட்டு நான் முழுமையாகத் திருப்தி அடைந்துவிட்டால், அந்த சப்ஜெக்ட் மக்களைப் போய்ச் சேர, ஆணித்தரமாகச் சொல்ல வேண்டும் என்று விரும்புவேன். இந்தப் படத்திலும் நம் யாராலும் தவிர்க்க முடியாத, அவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இயக்குநரின் தெளிவும் நம்பிக்கையும் எனக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது. மேலும், செட்டில் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர்கள் ஒரு சிறு தலையசைப்பிலேயே புரிந்து கொள்வார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *