Dispute over iPhone payment: Son jumps from hilltop; father dies trying to save him – ஐபோனுக்கு பணம் கொடுப்பதில் தகராறு: மலை உச்சியில் இருந்து குதித்த மகன், காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு

Spread the love

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல மணிநேரம் நீடித்த இந்த இழுபறியின்போது அப்பகுதியில் கூடியிருந்த உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் இச்சம்பவத்தைக் நேரில் கண்டனர். குனாலைக் கீழே இறங்கச் செய்வதற்கான முயற்சிகளின் போது எடுக்கப்பட்ட சில காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உனது அம்மாவுக்காக வாழ்

அதில் குனாலை மலையில் இருந்து இறங்கும்படி கூறிய போது ஒருவர், “உன் அம்மாவுக்காக வாழ்,” என்று குனாலிடம் ஒருவர் கூறினார். அவர் கீழே குதிக்க முயன்றபோது எடுக்கப்பட்ட வீடியோவில் இது பதிவாகியிருந்தது. அதற்கு அவர், “இல்லை, நான் சாக வேண்டும். அதுதான் ஒரே வழி,” என்று பதிலளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது தந்தை முரளிதர் சந்த்குடே அவரைச் சமாதானப்படுத்திப் பின்னோக்கி இழுக்க முயன்றார். ஆனால் இருவரும் கீழே விழுந்தனர். அதன்பின், அவரது தாயார் சங்கீதாவும் அவர்கள் பின்னால் கீழே குதித்தார்.

திஸ்காவ் கிராமத்தின் முன்னாள் சர்பஞ்சான சஞ்சய் ஜாதவ், குனாலிடம் பேசி அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார். அவர் இது குறித்து கூறுகையில், “‘அவருக்கு ‘ஐபோன் 15 ப்ரோ’ வாங்கித் தருவதாகவும் மற்றவர்கள் கூறினர். அதோடு அவனது தாயின் முகத்தைப் பார்க்குமாறும், கீழே குதிக்க வேண்டாம் என்றும், நீ படித்தவன் என்றும், உனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறினோம். நாங்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். எங்களால் முடிந்த அனைத்து விதமான வேண்டுகோள்களையும் விடுத்தோம்,” என்று ஜாதவ் கூறினார். அந்தச் சூழலில் குனால் தனது தோள்களைக் குலுக்கியபடியே, மரணம் மட்டுமே தனக்குள்ள ஒரே வழி என்று பிடிவாதமாகத் தெரிவித்து வந்தான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *