DJD: ‘சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடை’ – ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியின் புதிய சீசன்! dance jodi dance show new season launch prashanth simran sneha

Spread the love

இந்த நிகழ்ச்சி குறித்து, ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல் அதிகாரி வி.எஸ். ராகவன், “கடந்த 18 வருடங்களாக ஜீ தமிழ், மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

வித்தியாசமான கதைகள் மட்டுமில்லாமல், ‘சரிகமப’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் திறமையான போட்டியாளர்களுக்கு, கனவு மேடையை அமைத்து, ஒரு சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடையாக இருந்து வருகிறது.

பலரின் கனவை நனவாக்கும் மேடையாகவும், பல திறமையாளர்களுக்கு அங்கீகாரமும், அடையாளமும் தந்து அவர்களின் வாழ்வின் வழிகாட்டியாகவும் இந்த மேடை இருந்து வருகிறது.

Dance Jodi Dance - New Season

Dance Jodi Dance – New Season

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ கடந்த 10 வருடங்களாக பல திறமைகளையும், பல நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த முறையும் நிறைய திறமையாளர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் மிகுந்த திறமைசாலிகள், எனவே உங்களது எதிர்பார்ப்பு பெரியதாக இருக்கலாம்.

தமிழ்நாடே இதுவரை பார்த்திராத ஒரு பவர்ஃபுல் நடுவர் குழு இந்த சீசனில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே எந்தவொரு நிகழ்ச்சியிலும், இந்த அளவிற்கு ஒரு பிரமாண்டமான நடுவர் குழு இருந்ததில்லை.

இவர்களுடைய வழிகாட்டுதல் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சீசனில் இருந்து நாம் பல புதிய திறமைகளின் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணங்களை எதிர்பார்க்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *