Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்… மரணத்தை ஏற்படுத்துமா?

Spread the love

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி விக்கல்  எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது  போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத்.

பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத்

விக்கல் வருவதற்கு பெரும்பாலும் தீவிரமான காரணங்கள் எதுவும் இருக்காது. மிகச் சூடாக எதையாவது குடித்தாலோ, காஸ் நிறைந்த பானங்களை (Gaseous drinks) பருகினாலோ அல்லது வயிறு சற்று உப்பியிருந்தாலோ (Distended stomach) விக்கல் வரலாம். இவைதான் மிகவும் பொதுவான காரணங்கள்.

விக்கல் வரும்போது, குளிர்ந்த நீர் (Cold water) குடிப்பதன் மூலமாகவோ அல்லது உங்களால்  முடிந்தவரை மூச்சை அடக்கி வைத்திருப்பதன் (Hold your breath) மூலமாகவோ அதைச் சரிசெய்யலாம். மிக அரிதாக, சிறுநீரகச் செயலிழப்பு (Renal failure) அல்லது உதரவிதானத்தில் (Diaphragm) ஏற்படும் எரிச்சல் அல்லது பாதிப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரக்கூடும்.
ஒருவேளை விக்கல் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

விக்கல் வரும்போது, குளிர்ந்த நீர் (Cold water) குடிப்பதன் மூலமாகவோ அல்லது உங்களால் முடிந்தவரை மூச்சை அடக்கி வைத்திருப்பதன் (Hold your breath) மூலமாகவோ அதைச் சரிசெய்யலாம்.

விக்கலுக்கு உண்டான தீவிரமான காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பரிசோதித்து, அவை இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அப்படி தீவிர காரணங்கள் இல்லை என்ற பட்சத்தில், இதைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. அவற்றை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.  எனவே, விக்கல் வந்துவிட்டாலே அது உயிருக்கு ஆபத்தானது (Life-threatening) என்று நினைத்துப் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *