Doctor Vikatan: டிரெண்டாகும் Tai Chi வாக்கிங்… அப்படி என்ன ஸ்பெஷல்?

Spread the love

Doctor Vikatan: சமீபகாலமாக தாய்ச்சி வாக்கிங் என்ற பெயரில் ஒன்று டிரெண்ட் ஆகிறதே… அது என்ன… எல்லோரும் செய்யலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

தாய்ச்சி (Tai Chi) என்பது சீனர்களின் மிக மெதுவான அசைவுகளைக் கொண்ட ஒரு பயிற்சி முறையாகும். நீங்கள் சீனா சென்றால், பூங்காக்களில்  முதியவர்கள் குழுவாக இணைந்து மிக மெதுவாக உடற்பயிற்சிகளைச் செய்வதைப் பார்க்கலாம். முதியவர்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி மற்றும் தடுமாற்றங்களை 50% வரை குறைக்க தாய்ச்சி பயிற்சி உதவுகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டுகிறது.

தாய்ச்சி நடைப் பயிற்சியின் முக்கிய நோக்கமே மிக மெதுவாகவும், கவனத்துடனும் (conscious walking) நடப்பதுதான். முதலில் குதிகாலை (heel) மெதுவாகக் கீழே வைத்து, பின்னர் கால் விரல்களை (toes) மெதுவாக வைக்க வேண்டும். இதில் பல்வேறு வகையான நடை அசைவுகள் உள்ளன. இப்படி மெதுவாகச் செய்வதால் உங்களுக்கு உடலின் மீது நல்ல கட்டுப்பாடு (control),  வலிமை (strength) மற்றும் சமநிலை (balance) கிடைக்கும்.  இது உடற்பயிற்சி செய்வதற்கான பல வழிகளில் ஒரு வழிதானே தவிர, இதை மட்டுமே செய்தால் தான் நல்லது என்பதில்லை.

உதாரணத்திற்கு, ஓட்டப்பயிற்சியில் (Running) நீண்ட தூர ஓட்டம் (Long Distance), விரைவோட்டம் (Sprinting), இடைவெளி ஓட்டம் (Interval running) எனப் பல முறைகள் இருப்பது போல, நடையிலும் ‘டெம்போ வாக்கிங்’, ‘லாங் டிஸ்டன்ஸ் வாக்கிங்’ வரிசையில்   தாய்ச்சி   நடையும் ஒன்றாகும்.

ஓட்டப்பயிற்சியில் (Running) நீண்ட தூர ஓட்டம் (Long Distance), விரைவோட்டம் (Sprinting), இடைவெளி ஓட்டம் (Interval running) எனப் பல முறைகள் இருப்பது போல, நடையிலும் ‘டெம்போ வாக்கிங்’, ‘லாங் டிஸ்டன்ஸ் வாக்கிங்’ வரிசையில் தாய்ச்சி நடையும் ஒன்றாகும்.

இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்க விரும்புவது நல்ல விஷயம். ஆனால், இது மிகவும் மெதுவாக இருக்கும்.  இதற்கென பயிற்சி அளிக்கும் நபர்களிடம் முறையாகக் கற்றுக்கொண்டு செய்தால், எதற்காகச் செய்கிறோம், எதில் கவனம் செலுத்துகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து செய்ய முடியும்.

ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வது நல்ல விஷயம் தான். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆனால்,   தாய்ச்சி வாக்கிங் என்பது மிக மெதுவாக இருக்கும் என்பதால் இதற்கு அதிக பொறுமை (patience) தேவைப்படும்.  அமைதியான சூழலில், கவனத்தை உங்கள் பாத அசைவுகளிலும் மூச்சிலும் மட்டுமே வைத்துப் பயிற்சி செய்வதன் மூலம் சிறந்த மன அமைதியைப் பெற முடியும்.

ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்:
சென்னை, ஆழ்வார்பேட்டையில் Creed strength and conditioning studio நடத்துகிறார். 14 ஆண்டுகளாக ஃபிட்னெஸ் கோச்சாக இருப்பவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *